ஆயுதங்களை இடுப்பில் மறைத்து வைத்து வெளியில் எடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞரணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வீடியோ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் எடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாஜக இளைஞரணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.