மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகியை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் போலீஸார் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.
இது மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்ற நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.