‘எங்களுக்கும் குண்டு வைக்க தெரியும்’ என பேசிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கோரினர்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என பேசினார்.

இதையடுத்து கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கைதுக்கு பயந்த கர்னல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒருவாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News