ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.