அவதூறு பரப்பியதாக புகார் : பாஜக நிர்வாகி சவுதாமணி திடீர் கைது

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாகி சவுதாமணி கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சௌதாமணியை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News