கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் வீடு இடிக்கப்பட்டது..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பாஜக-வைச் சேர்ந்த ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவரான சங்கர் என்பவர் ஆக்கிரமித்து அதில் இரண்டடுக்கு மாடி வீடும் காட்டியுள்ளார்.

வீட்டை காலிசெய்யுமாறு கோயில் நிர்வாகம் பலமுறை அறிவித்தது. ஆனால் அவர் காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடத்தை காலி செய்து கோவிலிடம் இடத்தை ஒப்படைக்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையும் அவர் மதிக்கவில்லை.

இந்நிலையில், இன்று நூற்றுக்கணக்கான போலீசார் துணையுடன் அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அந்த இடத்தை இடித்து தரைமட்டமாக்கும் பணியையும் அந்த இடத்தை மீட்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.