ஒட்டுமொத்த தமிழகத்தையும், தங்களது குடும்ப சொத்தாக திமுக மாற்றிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, பாஜக கட்சியின் சார்பில், மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றி அமைத்தவர் தான் பிரதமர் மோடி என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அமித்ஷா பிரச்சாரம் செய்தால், நிச்சயம் 25 தொகுதிகளில், பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்னும் ஓராண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை சுட்டிக் காட்டிய ராம சீனிவாசன், நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்று அதிரடியாக கூறினார்.