நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கியுள்ளது” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார்.
அவர் பேசியதாவது: “26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட வாராது. நீதிமன்றத்தை விலைக்கு பாஜக வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அல்ல, உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளது.
ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சிபிஐ, என்ஐஏ, மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டவற்றை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில் பாஜக, மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.