பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது.
பாஜகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மார்ச் 5ஆம் தேதி அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது அவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.
இதனை தொடர்ந்து தகவல் தொழிநுட்ப அணி நிர்வாகி திலீப் கண்ணன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த மாவட்ட தலைவர், 2 துணைத் தலைவர்கள், 10 மாவட்ட செயலாளர்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விலகிய அனைவரும் அதிமுகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் பாஜகவிலிருந்து வெளியேறி வருவது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.