தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதே போல பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தமிழக பாஜகவின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சமீபத்தில் சிறைக்கு சென்று வந்த சவுக்கு சங்கருக்கு பாஜக தான் ஆதரவு அளித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதனால் இந்த செய்தியினை பலரும் நம்ப தொடங்கினர். ஆனால் இந்த தகவல் போலியானது என்றும், சவுக்கு சங்கருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.