மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த குஷ்புவின் பழைய ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், “மோடி என்று பெயர் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். இனி மோடி என்றாலே ஊழல் என்று மாற்றிவிடலாம். அதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். நிரவ், லலித், நமோ = ஊழல்” எனக் கூறியிருந்தார்.

இந்தப் பதிவை 2015ஆம் ஆண்டு குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பதிவிட்டுள்ளார். அதன் பிறகு 2020ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

குஷ்பூவின் இந்த ட்வீட்டைகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பூர்ணேஷ் மோடி, குஷ்பு மீதும் வழக்குப்பதிவு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.