விருதுநகர் திருத்தங்கல் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் பிரபல ஜவுளி கடை தொழில் அதிபர் ஈஸ்வரன் என்பவரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

முதல் கட்டத் தவணையாக 10 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அடுத்த சில நாட்களில் மீதி தொகையான 41 லட்சத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து பத்திரம் முடிக்க செல்வதற்காக சத்யராஜ் என்பவரை தொடர்பு கொண்ட பொழுது அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு அவருடைய வீட்டிற்கு சென்று விசாரித்த போது நான் உங்களிடம் பணம் வாங்கவே இல்லை என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர் பாஜக பிரமுகர் சத்யராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.