வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பாஜக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர் கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக உள்ள நிலையில் அந்த பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணியை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியிமித்துள்ளார். அது போல் தெலுங்கானா முன்னாள் பாஜக தலைவரான பண்டி சஞ்சய் குமார் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.