கர்நாடக பாஜக நிர்வாகி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜ் கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ரேவண்ணாவின் பாலியல் வீடியோ நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News