“பரிதாபமான நிலையில் தமிழக பள்ளிகள்” – அண்ணாமலை கடும் தாக்கு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில், மாணவி ஒருவர் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கடந்த 22-ஆம் தேதி அன்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர், தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 7-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதற்கு, தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவியின் பெற்றோரை, காவல்துறையில் 20 நாட்களுக்கு மேலாக புகார் அளிக்கவிடாமல், திமுக நிர்வாகி ஒருவர் தடுத்து நிறுத்தியதாகவும், கட்டப்பஞ்சாயத்தை நடத்தியதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து, நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், பரிதாபமான நிலையில் உள்ளது என்றும், தனது துறை தொடர்பான பணிகளை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்போது மேற்கொள்வார் என்றும், அந்த பதிவில், அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News