கடந்த 2020ம் ஆண்டில் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சாலையில் இறங்கி போராட்டத்தை நடத்தினர்.
அப்போது பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா சாலையில் போராடுவோரை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தவில்லையென்றால் நாங்கள் சட்டத்தை கையில் எடுப்போம் என பேசினார். இதையடுத்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது.
வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ராவுக்கு தற்போது டெல்லி பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.