ஓட்டுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியினர் கண்டித்து பாஜக பிரமுகர் போராட்டம் நடத்தினர்.
கோவை ஒண்டிப்புதூர் அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியில் பிரதான அரசியல் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு 500 ரூபாய் பணம் மாலை 5 மணிக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தகவல் அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான சிங்கை ஜான் என்பவர் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து ஓட்டுக்கு பணம் பெற மாட்டோம் எங்களுக்கு அடிப்படை வசதிகளை முதலில் நிறைவேற்றிக் கொடுங்கள் என்று முழக்கமிட்டார்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்தப் பகுதியில் இதுவரை சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் மாநகராட்சிக்கு வரி மட்டும் இங்குள்ள மக்கள் செலுத்தி வருகின்றனர் எனவும் கூறிய அவர், குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடும் சீரமைக்கப்படாத சாக்கடை கால்வாயில் இறங்கி தாங்கள் அனுபவிக்கும் வேதனையை நீங்களே பாருங்கள் இந்த சாக்கடை கால்வாயில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைகிறது.
எங்களால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் ஓட்டுக்கு மட்டும் 500 ரூபாய் பணம் தந்து எங்களை கேவலப்படுத்துகிறீர்களா? கொள்ளை அடித்த பணம் தானே ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என ஆவேசமாக கூறினார்.