அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் பாஜக? – அண்ணாமலையின் பேச்சால் பரபரப்பு

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என பேசியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு அதிமுக, பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.