கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்கின்றனர்.
அதன்படி ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்கிய பாத யாத்திரையில் பாஜக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பங்கேற்று செல்கிறார்கள். கோவையில் இருந்து புறப்படும் பாதயாத்திரையை பாஜக அண்ணாமலை சாமி தரிசனம் செய்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை : புனித யாத்திரையை வானதி ஈச்சனாரியில் இருந்து ஆரம்பிக்கிறார். கொங்கு பகுதியில் இருந்து பாஜக வளர 3 நாட்கள் நடை பயணமாக பழனி செல்கிறார்.
இதயம் கணக்கிறது. அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி. நான் வெளியில் இருந்து ரசித்து பார்த்துள்ளேன். போகும் வழியில் வரவேற்பளிக்க தயாராக உள்ளார்கள். சரித்திர பயணமாக புனித பயணமாக இருக்கும்.என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் : தைப்பூசத் திருவிழா என்பது காலம் காலமாக நடக்கிறது. எனக்கு இந்த வருடம் முருகன் ஆசி கொடுத்துள்ளார். நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும். இன்று வந்துள்ள அண்ணாமலைக்கு நன்றி என தெரிவித்தார்.