இந்துக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களை தாக்க வருவோர்களை பதிலடி கொடுக்க அது பயன்படும் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியது சர்ச்சயை ஏற்படுத்தியது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்கூர். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் போபால் நகரில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகாவின் தென் மண்டல ஆண்டு பட்டமளிப்பு விழாவில் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது உங்கள் வீட்டில் ஆயுதங்களை பாதுகாப்பாக வையுங்கள். ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது, உங்கள் வீட்டுக்குள் யாரேனும் நுழைந்து, உங்களைத் தாக்கினால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது உங்கள் உரிமை என அவர் பேசினார்.
பிரக்யா சிங் தாக்கூர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் ஷிவமோகா காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவல்லா பிரக்யா சிங் தாக்கூர் குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். பிரக்யா மீது போலீஸார் ஐபிசி 153-ஏ, 153-பி, 268, 295-ஏ, 298, 504, 508, ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.