எம்.பி-யை `தீவிரவாதி’ எனக் கூறிய பாஜக எம்.பி..சபாநாயகர் கடும் எச்சரிக்கை

புதிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் நடத்தப்பட்டது. அப்போது அந்த சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்றும், ‘பயங்கரவாதி’ என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். பாஜக எம்.பியின் இந்த பேச்சு அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக எழுந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக எம்.பியின் பேச்சுக்கு தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். எம்.பியின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பாஜக எம்.பி, பிற கட்சியை சேர்ந்த இஸ்லாமிய எம்.பியை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளது எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியிலும் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

RELATED ARTICLES

Recent News