கடந்த 19-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்றும், ‘பயங்கரவாதி’ என்றும் பேசினார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ரமேஷ் பிதுரியின் பேச்சு ‘இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். அதேபோல், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடுமையான எச்சரிக்கையை ரமேஷ் பிதுரிக்கு விடுத்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக எம்பி ரமேஷ் பிதுரியை அக்கட்சி நியமித்துள்ளது. வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை ரமேஷ் பிதுரிக்கு பாஜக கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.