நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹிமாசல பிரதேச, மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.
இதையொட்டி, டெல்லியில் நடைபெற இருந்த பாஜக எம்.பி கூட்டத்தில் பங்கேற்க சண்டீகர் விமான நிலையத்திற்கு வந்தார்.
விமானத்தில் ஏறும்முன் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின்போது, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கங்னாவை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து, கங்கனாவைத் தாக்கிய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் நடிகை கங்கனாவை அறைந்தது ஏன் என்பது குறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் விளக்கமளித்துள்ளார்.
இது குறிந்து அவர் கூறுகையில், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.