Connect with us

Raj News Tamil

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது என பாஜக மனு

அரசியல்

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது என பாஜக மனு

கடந்த மாதம் 6-ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் சென்றபோது அதில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேர்தல் செலவுகளுக்காக நயினார் நாகேந்திரன் உத்தரவின் பேரிலேயே பணத்தை நெல்லைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று நடைபெறுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top