டெல்லியில் மதுபான விற்பனைக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தடுப்புகளை தள்ளிவிட முயன்ற போது போலீசார் அதை தடுத்ததால் போலீசாருடன் பாஜகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 5 நபர்கள் மற்றும் 7 நிறுவனங்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.