எடப்பாடி பழனிசாமி போட்டோவை எரித்து பா.ஜ.கவினர் போராட்டம்..!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். மேலும் 420 மலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்தநிலையில், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பா.ஜ.க சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘எங்கள் அண்ணன் அண்ணாமலையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பா.ஜ.கவிலிருந்து விலகிய நிர்வாகியை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொண்ட கூட்டணித் தர்மத்தைப் போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை எரித்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News