ஆனி திருமஞ்சன நிகழ்வையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி வழிபட4 நாட்களுககு கோயில் நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த தடையை மீறி இந்து அறநிலையத் துறையினர் கனக சபையில் ஏறி வழிபாடு நடத்தினர்.
இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் போலீசாரிடம் மனு அளித்திருந்தார். போலீசார் அனுமதி மறுத்ததால் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை வடக்குர வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இவர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.