பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடக மாநில முழுவதும் பாஜக சார்பில் நாளை (ஜூன் 17) போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கும் வகையில் எரிபொருளுக்கான விற்பனை வரியை கர்நாடக அரசு நேற்று உயர்த்தியது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “ மாநில அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 அதிகரித்துள்ளது. இந்த முடிவை முதல்வர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.