ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி கைது..!

தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 2ஆயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் பாஜகவில் இணைந்த போது அவருக்கு விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் என்ற மூன்று பேரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News