தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். இந்த பட்டியலில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஜூலை 14ம் தேதி அண்ணாமலை ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ந்தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.