பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் – சுப்ரமணிய சாமியின் கருத்தால் பரபரப்பு

பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணிய சாமி பாஜகவில் இருந்து கொண்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இருப்பினும் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்குதல், தீவைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பதிவு ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மணிப்பூரில் ஆளும் பாஜக அரசை அகற்றுங்கள். உடனே இந்திய சட்டப்பிரிவு 356ன் கீழ் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விளையாட்டு துறைக்கு அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News