2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி இல்லாவிட்டால் பாஜக வளரும் எனவும் இல்லாவிட்டால் முதுகெலும்பற்ற கட்சியாக வீழ்ச்சியடையும் எனவும் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தனது சொந்த கட்சியினரை விமர்சித்து வருகிறார். பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர் நிதியமைச்சர் என நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். சினிமா கலாச்சாரத்தால் தமிழக பாஜக சீரழிந்துவிட்டது என தமிழக பாஜகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் நிதிஷ் ராஜ் என்ற பயனர் அண்மைக்காலமாக நிறைய நிகழ்ச்சிகளில் உங்களை போன்ற தலைவர்களை பாஜக ஓரங்கட்டுவது போல் இருக்கிறதே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள சுப்மரணியன் சாமி 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படாவிட்டால், பாஜக வளரும். இல்லையெனில் முதுகெலும்பற்ற கட்சியாக வீழ்ச்சியடையும். என்று பதில் அளித்துள்ளார்.
சுப்ரமணியன் சாமி பிரதமர் மோடியை விமர்சித்து கூறியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.