ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக வெற்றி: தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், இடையே நேரடிப் போட்டி காணப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக மேலும் வலுப்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 164 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

ராஜஸ்தானில் 200 தொகுதிகள் உள்ள நிலையில், 199 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 199 இடங்களில் 115 தொகுதிகளை வென்று பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

சத்தீஷ்காரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 54 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா அபார சாதனை படைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 35 இடங்கள் பெற்றது.

தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு மொத்தமுள்ள 119 இடங்களில் அந்த கட்சி 64 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி 39 இடங்களை பிடித்தது.

RELATED ARTICLES

Recent News