முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.பழனிசாமி இல்ல திருமண நிகழ்ச்சி திருவொற்றியூரில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் சிறப்பான ஆட்சியை அங்கீகரிக்கும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெறும். ‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பாஜக தலைமையில் ஆட்சி அமையும்; அப்போது பேரவையில் செங்கோலை வைப்போம்’ என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்த கருத்து அவரது கனவை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. எனவே, பாஜக கனவு எப்போதும் நிறைவேறாது என்றார் கனிமொழி.