12 நாட்களில் பல கோடி வசூல்! சாதித்த பிளாக்!

கடந்த பல வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் ஜீவா. எனவே, நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த இவர், பிளாக் என்ற படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.

கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆன இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 12 நாட்களில், இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 9.6 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News