பால சுப்பிரமணி இயக்கத்தில், ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Black. கடந்த 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 2 நாட்களில், இப்படம் 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தோடு Black ரிலீஸ் ஆனதால், அதற்கு வரவேற்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கதை சிறப்பாக இருந்தால், அதன் வெற்றியை தடுக்க முடியாது என்பது, மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.