ஜீவா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில், பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் Black.
சாம் சி.எஸ். இசையமைத்த இந்த திரைப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.
இதனால், இப்படத்தின் வசூலும் கனிசமான அளவில் உயர்ந்து வந்தது. இந்நிலையில், 15 நாட்களில், இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 9.9 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.