பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மாதுரஸ் பால் என்பவர் பயணித்தார். பயணத்தின்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டபோது பிளேடு போன்ற ஒரு கூர்மையான இரும்புத் துண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது.
வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில் மறைந் திருந்த அந்த பிளேடை வாயில் போட்டு மென்ற பிறகுதான் தெரிய வந்தது அது உலோகத் துண்டு என்று. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், குழந்தை அந்த உணவை சாப்பிட்டிருந்தால் பெரும் பிரச்சினை உருவாகி இருக்கலாம். நிச்சயமாக ஏர் இந்தியா கேட்டரிங் சேவையின் மீது குறைபாடு உள்ளது.
எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் துப்பிய உலோகத் துண்டு மற்றும் பரிமாறப்பட்ட உணவின் படங்களை இணைத்துள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.