சிவகாசியில் ஒரே நாளில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து..!

சிவகாசியில் ஒரே நாளில் இருவேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கனஞ்சம்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் சத்திரப்பட்டி சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் தொழிலாளி உட்பட இருவர், இடிபாடுகளுக்குள் சிக்கி, உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், கருப்பசாமி, மாரீஸ்வரன், மாரிமுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட 7 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, இன்று காலை செங்கமலபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து எற்பட்டது. இந்த விபத்தில் ரவி என்ற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

RELATED ARTICLES

Recent News