இந்தியா
வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி!
கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கல் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடிரென அடுத்தடுத்து குண்டு வெடித்தன. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
