பார்வை குறைபாட்டுடன் செஸ்-ல் கலக்கும் வெளிநாட்டு வீராங்கனை…!

24 வயதாகும் நடாஷா போர்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்தவர் செஸ் வீராங்கனை ஆவார்… இவருக்கு பின் நெகிழ்ச்சியான கதை ஒன்று உள்ளது.

இவருக்கு இடது கண்ணில் சுத்தமாக பார்வை இல்லை. வலது கண்ணில் 20 சதவிகிதம் மட்டுமே பார்வை உள்ளது.மொத்தம் 20 சதவிகிதம் பார்வையோடு இவர் செஸ் ஆடி வருகிறார்.

அதிலும் தனது வேகமான மூவ்கள் மூலம் அசத்தி வருகிறார். இவருக்கு என்று பிரெய்லி போர்ட் உள்ளது.இவரின் உதவியாளர் ஒருவருடன் இவர் ஆடுகிறார்.

இந்த பிரெய்லி போர்டில் இவர் காய்களை நகர்த்துவார். அதே மூவ்களை இவர் அருகில் இருக்கும் உதவியாளர் எதிரணி வீரர் ஆடும் போர்டில் நகர்த்துவார்.

எதிரணி வீரர் மீண்டும் அவரின் காயை நகர்த்தியதும்.. நடாஷாவிடம் அதை உதவியாளர் தெரிவிப்பார். இதன் மூலம் எதிரணி வீரரின் மூவை தெரிந்து கொண்டு அதன்பின் நடாஷா மீண்டும் காய்களை நகர்த்துவார். மொத்தம் இரண்டு போர்ட் வைத்து ஆடுவார்கள். அதில் ஒன்று பிரெய்லி போர்ட்! இப்படித்தான் இவர் பிரெய்லி போர்ட் உதவியுடன் ஆடி வருகிறார்.

இந்த சீசனில் 2 போட்டிகளில் டிரா, ஒன்றில் வெற்றி, 3ல் தோல்வி அடைந்து உள்ளார். போர்டோ ரிக்கோவில் பெண்கள் பிரிவில் இவர்தான் நம்பர் 2 வீரர். சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் இவர் 1924 புள்ளிகளை கொண்டு உள்ளார்.

இவர் பிரெய்லி செஸ் போர்டுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் அந்த போர்டை பார்க்கவே பலர் வருகின்றனர். இவருக்கு செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் டைமரை கூட உதவியாளர்தான் பார்த்து சொல்ல வேண்டும். இவர் பிரெய்லி செஸ் போர்டுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் அந்த போர்டை பார்க்கவே பலர் வருகின்றனர்.