வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், சிறப்புரையாற்றியிருந்தார்.
அப்போது பேசிய அவர், “மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை தான் பலர் பாராட்டுவார்கள். ஆனால், அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் படங்களை பாராட்ட மாட்டார்கள்.
இதற்கு காரணம் என்னவென்றால், இந்த இரண்டு படங்களின் கதாநாயகர்கள், திருப்பி அடிக்கிறான். அதனால் தான் பாராட்ட மறுக்கிறார்கள்” என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளு சட்டை மாறன், “இந்த இரண்டு கதாநாயகர்களை விட அதிகமாக, சார்பட்ட பரம்பரை படத்தில் ஆர்யா திருப்பி அடித்தார்.
அந்த படத்தை எல்லோரும் பாராட்டினார்களே, அது மறந்து போச்சா ரஞ்சித்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.