நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய்-க்கும் மேல் வசூலித்து, சாதனை படைத்தது.
ஆனால், இந்த வசூல் சாதனைகள் அனைத்தும் பொய் என்று சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ப்ளு சட்டை மாறன் இன்னொரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“கோடம்பாக்கத்தின் இன்னொரு ராட்சச சைஸ் வடை:
120 சர்வதேச விருதுகள்!!!
இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஆன்லைன் சான்றிதழ்கள் எத்தனை? நேரில் தரப்பட்ட விருதுகள் எத்தனை?
ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் (வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை).. இவற்றுள் பெரும்பாலானவை திடீரென்று உருவாக்கப்பட்ட உப்மா வெப்சைட் மற்றும் உப்மா அமைப்புகள் தந்தவைதானே?
இந்த கேள்விக்கு நாம் பலமுறை பதில் கேட்டும் இதுவரை பதில் வரவே இல்லை.
அப்படியென்றால் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் ஊடகத்தினரை பட்டப்பகலில் ஏமாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாமா?
படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. இதற்கான ஆதாரங்களை இன்றுவரை இவரிடம் ஒரு பத்திரிகை அல்லது ஊடகம் கூட ஏன் கேட்கவில்லை?
இதோ நான் மீண்டும் கேட்டுள்ளேன். 120 விருது வாங்கியதற்கான மொத்த ஆதாரங்களுடன் ப்ரெஸ் மீட் கூட்டி நிரூபிக்க முடியுமா சார்?
நிலைமையை சமாளிக்க அவசர அவசரமாக போட்டோஷாப் பட்டியல் ரெடியாகுமா அல்லது இரண்டாம் ஆண்டை நோக்கி இந்த பலத்த மௌனம் பயணிக்குமா?
வாய்ல புண்ணா? மௌன விரதமா?”
இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்பு ரஜினியை விமர்சித்த ப்ளு சட்டை மாறன், தற்போது பார்த்திபனை வம்பிழுக்க ஆரம்பித்து விட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.