அஜித்தை வறுத்தெடுத்த மாறன்! காரணம் என்ன?

துணிவு படத்தின் புரோமோஷன் பணிகளில் அஜித் கலந்துக் கொள்வார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் வதந்தி என்று அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரபல Youtube விமர்சகர் ப்ளு சட்டை மாறன், அஜித்தை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு, வருடத்தின் 365 நாட்களும், புகைப்படங்களை வெளியிடுவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துக் கொண்டால், படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் மகிழ்வார்களே என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.