அஜித்தால் பதற்றம் அடையும் விஜய்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இவ்வாறு இருக்க, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, பனையூரில் உள்ள தனது இல்லத்தில், தடபுடல் விருந்து வைத்துள்ளார். இதனை அறிந்த ப்ளு சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மீண்டும் பிரியாணி.. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில், விஜய் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு, வைரலாகி வருகிறது.