Connect with us

Raj News Tamil

மாவீரன் படம் இந்த படத்தின் காப்பியா? – விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன்!

சினிமா

மாவீரன் படம் இந்த படத்தின் காப்பியா? – விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன்!

மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வீன். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்த இவர், மாவீரன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை, 75 கோடி ரூபாய் வரை இப்படம் வசூலித்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 2008-ஆம் ஆண்டு வெளியான ஸ்விங் ஓட் என்ற ஆங்கில திரைப்படத்தை தழுவி தான் மண்டேலா படம் எடுக்கப்பட்டது என்றும், அதேபோல், 2006-ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன் படத்தை தழுவி தான், மாவீரன் எடுக்கப்பட்டது என்றும், தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு, இயக்குநர் மடோன் அஸ்வின் பதில் கொடுப்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

More in சினிமா

To Top