Connect with us

Raj News Tamil

அஜித்தை முதன்முறையாக புகழ்ந்து தள்ளிய ப்ளு சட்டை மாறன்!

சினிமா

அஜித்தை முதன்முறையாக புகழ்ந்து தள்ளிய ப்ளு சட்டை மாறன்!

சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், மற்ற நடிகர்களை காட்டிலும், அஜித்தை அதிகமாக விமர்சனம் செய்வார். திரைப்படங்கள் மட்டுமின்றி, உடல் ரீதியான கேலி கிண்டல்களையும் செய்துள்ளார்.

ஆனால், முதன்முறையாக இவர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது, வேதாளம் திரைப்படம், போலா சங்கர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை விமர்சித்து, மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வேதாளம் பழைய கதையாக இருந்தாலும், திரைக்கதையும், அஜித்தின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும்.

ஆனால், போலா சங்கர் திரைப்படம் மொக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார். இது 8-வது அதிசயமாக இருக்கே என்று நெட்டிசன்களும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top