ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும், பாசிட்டிவ்வான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர்.
இதனால், இந்த திரைப்படம், ரஜினிக்கும், நெல்சனுக்கும் நல்ல வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நெல்சன் நம்ம ஆளு தான்.. மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், “இவர் படத்தை புகழ்கிறாரா? அல்லது விமர்சிக்கிறாரா?” என்று குழப்பத்தில் உள்ளனர்.