சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள அக்கறை பகுதியில், நடிகர் விஜய் கார் நேற்று முன்தினம் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, அங்கு இருந்த சிக்னலை, அந்த கார் மதிக்காமல் சென்றதால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ப்ளு சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாணவ செல்வங்களே, சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்ட சொல்லி பெற்றோர்களிடம் சொல்லுங்கள்.
ஏன் என்றால், நமக்கு 500 ரூபாய் என்பது, 10 கிலோ அரிசி வாங்கும் பணம் என்று தெரிவித்துள்ளார். விஜயை விமர்சிக்கும் வகையில் உள்ள பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.