ப்ளு ஸ்டார் ரிலீஸ் தேதி எப்போது? – அசோக் செல்வனுக்கு இன்னொரு ப்ளாக் பஸ்டர் பார்சல்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்து வருபவர் அசோக் செல்வன்.

ஓ மை கடவுளே, மன்மத லீலை, போர் தொழில், சபா நாயகன் என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது ப்ளு ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால், இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நீண்ட நாள் ஆகியும், அப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழுவினர் அறிவிக்காமலே இருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம், வரும் ஜனவரி 25-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News